50 Bible Quiz Questions from Matthew 11 & 12 in Tamil | வேதாகம வினாடி வினா

______________________________________________

கேள்வி 1

வருகிறவர் நீர் தானா, அல்லது வேறொருவர் வர காத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி யாருடையது ?

விடை : யோவான்

______________________________________________

கேள்வி 2

எதைப்பார்க்க வனாந்தரத்திற்கு போனீர்கள் என்று ஜனங்களிடம் கேட்டது யார் ?

விடை : இயேசு

______________________________________________

கேள்வி 3

நாணல் எதினால் அசையும் ?

விடை : காற்றினால்

______________________________________________

கேள்வி 4

மெல்லிய வஸ்திரம் தரித்திருக்கிறவர்கள் எங்கே இருக்கிறார்கள்? 

விடை : அரசர் மாளிகைகளில்

______________________________________________

கேள்வி 5

தீர்க்கதரிசியிலும் மேன்மையானவன் யார் ?

விடை : யோவான் 

______________________________________________

கேள்வி 6

யாரிடத்தில் பிறந்தவர்களில் யோவான் பெரியவன் ?

விடை : ஸ்திரீகளிடத்தில்

______________________________________________

கேள்வி 7

பலவந்தம் பண்ணுகிறவர்கள் எதைப் பிடித்துக் கொள்கிறார்கள் ?

விடை : பரலோகராஜ்யம்

______________________________________________

கேள்வி 8

யோவானை இயேசு யார் என்று அடையாளப்படுத்தினார் ?

விடை : வருகிறவனாகிய எலியா 

______________________________________________

கேள்வி 9

கேட்கிறதற்கு _________ கேட்க கடவன் 

விடை : காதுள்ளவன்

______________________________________________

கேள்வி 10

இயேசு சந்ததியாரை யாரோடு ஒப்பிட்டார் ?

விடை : குறைகூறுகிற பிள்ளைகளோடு

______________________________________________

கேள்வி 11

போஜனபானம் பண்ணாதவனாய் வந்தது யார் ?

விடை : யோவான் 

______________________________________________

கேள்வி 12

போஜனபிரியனும் மது பிரியானுமான மனுஷன் என்று யாரை குறை கூறினார் ?

விடை : இயேசுவை

______________________________________________

கேள்வி 13

ஞானமானது யாரால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் ?

விடை : அதன் பிள்ளைகளால் 

______________________________________________

கேள்வி 14

எந்த பட்டணங்களை இயேசு கடிந்து கொண்டார் ?

விடை : கோரேசின், பெத்சாயிதா

______________________________________________

கேள்வி 15

பலத்த செய்கைகள் எங்கு செய்யப்பட்டிருந்தால் மனம் திரும்பி இருப்பார்கள் என்று இயேசு சொன்னார் ?

விடை : தீரு, சீதோன் 

______________________________________________

கேள்வி 16

பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவது எது ?

விடை : கப்பர்நாகூம்

______________________________________________

கேள்வி 17

எது பிதாவினால் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது என்று இயேசு சொன்னார் ?

விடை : சகலமும் 

______________________________________________

கேள்வி 18 

யாருக்கு இளைப்பாறுதல் தருவதாக இயேசு சொன்னார் ?

விடை : வருத்தப்பட்டு பாரம் சுமப்பவருக்கு

______________________________________________

கேள்வி 19 

நான் சாந்தமும் _________மாய் இருக்கிறேன் 

விடை : மனத்தாழ்மையுமாய் 

______________________________________________

கேள்வி 20

எது மெதுவாயும் எது இலகுவாயும் இருக்கிறது என்றார் ?

விடை : நுகம், சுமை 

______________________________________________

கேள்வி 21 

எதன் வழி போனபோது சீடர்கள் பசியாய் இருந்தார்கள் ?

விடை : பயிர் வழியே

______________________________________________

கேள்வி 22 

ஆசாரியர்கள் தவிர வேறொருவரும் புசிகத்தகாதது எது ?

விடை : தேவ சமூகத்து அப்பங்கள் 

______________________________________________

கேள்வி 23 

ஆசாரியர்களின் தேவ சமூகத்து அப்பத்தை புசித்தது யார் யார் ?

விடை : தாவீதும் அவனோடிருந்தவர்களும்

______________________________________________

கேள்வி 24 

ஓய்வு நாளில் தேவாலயத்தில் ஓய்ந்திராதது யார் ?

விடை : ஆசாரியர்கள்

______________________________________________

கேள்வி 25 

ஆசாரியர்கள் ஓய்வுநாளில் வேலைசெய்தாலும் குற்றமில்லாதவர்கள் என்று கூறுவது எது ?

விடை : வேத வாக்கியம்

______________________________________________

கேள்வி 26 

தேவாலயத்திலும் பெரியவர் யார் ?

விடை : இயேசு

______________________________________________

கேள்வி 27 

ஓய்வுநாளுக்கு ஆண்டவராய் இருக்கிறது யார் ?

விடை : மனுஷகுமாரன் 

______________________________________________

கேள்வி 28 

சூம்பின கையுடைய மனுஷன் எங்கே இருந்தான் ?

விடை : ஜெப ஆலயத்தில் 

______________________________________________

கேள்வி 29 

ஆட்டைப் பார்க்கிலும் விசேஷித்தவன் யார் ?

விடை : மனுஷனானவன்

______________________________________________

கேள்வி 30

கையை நீட்டி சொஸ்தமானது யார் ?

விடை : சூம்பின கையுடையவன்

______________________________________________

கேள்வி 31 

இயேசுவை கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணினது யார் ?

விடை : பரிசேயர்

______________________________________________

கேள்வி 32 

எதுவரைக்கும் நெரிந்த நாணலை முறிக்காமல் மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார் ?

விடை : நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கும் வரை

______________________________________________

கேள்வி 33 

தாவீதின் குமாரன் இவர்தானோ என்றது யார் ?

விடை : ஜனங்கள் 

______________________________________________

கேள்வி 34 

பிசாசுகளின் தலைவன் யார் ?

விடை : பெயல்செபூ

______________________________________________

கேள்வி 35 

தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எது நிலைநிற்கமாட்டாது ?

விடை : பட்டணமும், வீடும் 

______________________________________________

கேள்வி 36 

இயேசு எதனாலே பிசாசுகளை துரத்தினார் ?

விடை : தேவனுடைய ஆவியினாலே 

______________________________________________

கேள்வி 37 

யாரை கட்டினால் பலவானுடைய வீட்டை கொள்ளையிடலாம் ?

விடை : பலவானை 

______________________________________________

கேள்வி 38 

இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாதது எது ?

விடை : பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் பேசுவது 

______________________________________________

கேள்வி 39

எப்படிப்பட்ட மரத்தின் கனி நல்லது ?

விடை : நல்லமரத்தின் 

______________________________________________

கேள்வி 40 

எதன் நிறைவினால் வாய் பேசும் ?

விடை : இருதயத்தின் 

______________________________________________

கேள்வி 41 

மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவுக்கும் எப்போது கணக்கு ஒப்புவிக்க வேண்டும் ?

விடை : நியாயத்தீர்ப்பு நாளில் 

______________________________________________

கேள்வி 42 

பெரிய மீனின் வயிற்றில் மூன்று நாள் இரவும் பகலும் இருந்தது யார் ?

விடை : யோனா 

______________________________________________

கேள்வி 43 

யோனாவின் பிரசங்கத்தை கேட்டு யார் மனம்திரும்பினார் ?

விடை : நினைவே மக்கள்

______________________________________________

கேள்வி 44

சாலமோனுடைய ஞானத்தை கேட்க வந்தது யார் ?

விடை : தென்தேசத்து ராஜஸ்திரி 

______________________________________________

கேள்வி 45 

ஒரு மனுஷனை விட்டு புறப்படும் அசுத்த ஆவி எங்கு அலைந்து இளைப்பாறுதல் கண்டடையாது ?

விடை : வறண்ட இடங்களில்

______________________________________________

கேள்வி 46

நான் விட்டு வந்த என் வீட்டிற்கு திரும்ப போவேன் என்று கூறுவது யார் ?

விடை : அசுத்த ஆவி 

______________________________________________

கேள்வி 47

அசுத்த ஆவி புறப்பட்டு யாரை அழைத்துவரும் ?

விடை : பொல்லாத வேறு ஏழு ஆவிகளை

______________________________________________

கேள்வி 48 

இயேசுவின் தாயும் சகோதரரும் அவரிடம் பேச எங்கே நின்றார்கள் ?

விடை : வெளியே

______________________________________________

கேள்வி 49

இதோ என் தாயும் என் சகோதரரும் இவர்களை என்று இயேசு யாரை சுட்டிக்காட்டினார் ?

விடை : தமது சீடர்களை

______________________________________________

கேள்வி 50

யாருடைய சித்தத்தை நிறைவேற்றுகிறவன் எனக்கு சகோதரரும் சகோதரியும் என்று இயேசு சொன்னார் ?

விடை : பரலோகத்திலிருக்கிற பிதாவின்

______________________________________________

Comments

Popular posts from this blog

வேதாகம கேள்விகள் ??? மத்தேயு நற்செய்தி நூல் 1முதல்7 அதிகாரத்தில் இருந்து 50 Quiz with answers

முன்னுரை: இது புது வாழ்விற்கான அழைப்பு..