"கிறிஸ்தவ ஜெப கூடங்கள் மீது கட்டுப்பாடுகள்? – மத சுதந்திரம், சவால்கள் மற்றும் தீர்வுகள்"
📖 கிறிஸ்தவ மத வளர்ச்சி – ஒரு சாதனை பயணம்
இந்தியாவில் சிறுபான்மையினர் என அறியப்படும் கிறிஸ்தவர் சமயம் உலக அளவில் பல எதிர்ப்புகளை சந்தித்தாலும் அதன் வளர்ச்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதன் வளர்ச்சி பெரும் வளர்ச்சி. ஆதித்திருச்சபை (Early Church)எனும் சிறுகுழுவாக இருந்ததை நினைவில் கொள்ளுங்கள். எவ்வளவு வளர்ச்சி உள்ளதோ அந்த அளவு ஒடுக்குதலும் சந்தித்துள்ளது கிறிஸ்தவம். நடைமுறையிலும் சந்தித்து வருகிறது என்பதே உண்மை.
⛪கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை - உலகளவில்
உலக அளவில் கிறிஸ்தவ மதம் மிகப்பெரிய மதமாக உள்ளது மக்கள்தொகை அடிப்படையில் உலகில் கிறிஸ்தவர்களின் விழுக்காடு
🔹கிறிஸ்தவர்கள் – 31.2%
(உலக மக்கள் தொகையில் சுமார் 2.6 பில்லியன் பேர்)
🔹 இது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி (1/3)
அமெரிக்கா கண்டம் மிக அதிகமான கிறிஸ்தவர் சதவிகிதம் – 80%க்கும் மேல் சில நாடுகளில்
ஐரோப்பா கண்டம் பாரம்பரிய கிறிஸ்தவ நிலம் – ஆனால் தற்போதைய செயல்பாடு குறைந்துள்ளது
ஆப்பிரிக்கா கண்டம் வேகமாக வளர்ந்து வரும் கிறிஸ்தவ மக்கள் தொகை
ஆசியா கண்டம் சிறுபான்மையினர் (India, China) – ஆனால் சில நாடுகளில் திடீர் வளர்ச்சி (South Korea, Philippines) |
ஓஷனியா (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து) பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள்
உலகில் அதிக கிறிஸ்தவர்கள் உள்ள நாடுகள் (2024 கணக்குகள் அடிப்படையில்)
1வது இடம் 🇺🇸 அமெரிக்கா 240 மில்லியன்
2 வது இடம் 🇧🇷 பிரேசில் 180 மில்லியன்
3வது இடம் 🇲🇽 மெக்சிகோ 110 மில்லியன்
4வது இடம் 🇷🇺 ரஷ்யா 100 மில்லியன்
5வது இடம் 🇵🇭 பிலிப்பைன்ஸ் 90 மில்லியன்
6வது இடம் 🇳🇬 நைஜீரியா 87 மில்லியன்
கணிப்பு :
2050க்குள், ஆப்பிரிக்கா உலகின் மிகப்பெரிய கிறிஸ்தவ கண்டமாக மாறும் என ஆய்வுகள் கூறுகின்றன.
இந்து, இசுலாம் மதங்களை விட, கிறிஸ்தவ மதம் தற்போது அதிக அளவில் பரவியிருக்கும் மதமாக உள்ளது.
சிறிய எண்ணிக்கையாக இருந்து, இன்று உலகில் மிகப்பெரிய மதமாக மாற்றப்பட்டுள்ளது – இது சாதனை!
🕊️ மத சுதந்திரம் – ஒரு அடிப்படை உரிமை
கிறிஸ்தவத்தின் படி மிக முக்கியமாக கடைபிடிக்கப்படுவது ஜெபமும், தொழுகையும். ஆனால் இன்று, ஜெப கூடங்களுக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன. அனுமதியின்றி ஜெப கூடங்கள் நடத்துவது சட்டரீதியாக சவாலாகியிருக்கிறது.
⚠️ சவால்கள் என்ன?
* அனுமதி இன்றி ஜெப கூடங்கள் நடத்த முடியாத நிலை.
* புதிய ஆலயங்கள் தொடங்குவதில் தடைகள்.
* சமுதாய எதிர்ப்புகள்.
ஆனால்…
✅ அனுமதியின் மூலம் கிடைக்கும் வெற்றி
அனுமதி பெற்ற ஜெப கூடங்கள்:
* முழுமையான பாதுகாப்புடன் இயங்கலாம்.
* நீண்ட காலத்திற்கு தடையில்லாமல் ஜெபிக்க முடியும்.
* அரசு விதிமுறைகளை பின்பற்றி வளர்ச்சி காணலாம்.
குடும்ப ஜெபம் மற்றும் தனிநபர் ஜெபத்திற்கு எந்த தடையும் இல்லை என்பது வெற்றிக்கான பாதையே... பயன்படுத்துவோம். ஜெபிப்போம்...
🪜 சவால்கள் = சாதனைகளின் படிக்கட்டுகள்
சவால்கள் இல்லாமல் வெற்றி கிடைக்காது. ஒவ்வொரு தடையும் – வளர்ச்சிக்கான வாய்ப்பு.
💬 உங்கள் கருத்து என்ன?
இந்த பதிவின் கருத்துகள் உங்களுக்குள் ஏதேனும் கருத்தை எழுப்பினதா?
👉 கமெண்டில் உங்கள் எண்ணங்களை பகிருங்கள்.
👉 எங்களின் மற்ற பதிவுகளையும் வாசிக்க மறவாதீர்கள்.

Comments
Post a Comment